search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம்"

    ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படைக்கும் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும்போது, அலுவலகத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.


    இதையடுத்து அவர்களை மீட்க அதிரடி படையினர் முயற்சித்தனர். இந்த முயற்சியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், அலுவலகத்தினுள் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கின்றன்றனரா என்பது குறித்து வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் நீடித்த இந்த மோதல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. #Afghanistan
    ×